ECONOMY

அரசு ஊழியர்களில் 50 விழுக்காட்டினருக்கு சொந்த வீடு இல்லை- கியூபெக்ஸ்

26 செப்டெம்பர் 2022, 4:38 AM
அரசு ஊழியர்களில் 50 விழுக்காட்டினருக்கு சொந்த வீடு இல்லை- கியூபெக்ஸ்

மலாக்கா, செப் 25- அரசு ஊழியர்களுக்கான குறைந்த பட்ச சம்பள முறை பொருத்தமற்றதாக உள்ள காரணத்தால் மலேசியாவிலுள்ள 16 லட்சத்து அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் இன்னும் சொந்த வீட்டைப் பெற முடியாத நிலையில் உள்ளனர் என்று அரசு ஊழியர்கள் தொழிற்சங்க காங்கிரஸ் (கியூபெக்ஸ்) தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறினார்.

தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதிய முறை, 12வது மலேசியத் திட்டத்தின் கீழ் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை உயர் வருமானம் கொண்ட நாடாக மாற்றும் இலக்கையும் குடும்ப வருமானத்தை மாதம்10,000 வெள்ளியாக உயர்த்தும் இலக்கையும் அரசாங்கம் அடைவதை கடினமாக்கும் என்று அவர் சொன்னார்.

ஆகவே, புதிய குறைந்தபட்ச ஊதியத்தை 1,800 வெள்ளியாக நிர்ணயிப்பது, அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளை பெறுவதை மட்டுமல்லாமல், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உணவு மற்றும் குடிநீர் செலவுகளை அவர்கள் ஈடுசெய்வதையும் உறுதி செய்யும் என்று அவர் அவர் தெரிவித்தார்.

நமது சம்பள கணிப்பு அரசு ஊழியர்களை குறிப்பாக பெரிய நகரங்களில் வீடு வாங்க தகுதியற்றவர்களாக ஆக்குகிறது. குறிப்பாக பெரிய நகரங்களில், தகுதியானவர்களுக்கு, அவர்கள் வாங்கும் வீடுகளும் பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. பெரிய நகரங்களில் வசிக்கும் சிலர் வாடகைக்கு ஒரு அறையை மட்டுமே பெற முடியும் நிலை உள்ளனர் என்றார் அவர்.

புதிதாக பணியில் சேருவோருக்கான தற்போதைய சம்பளம் கோலா எனப்படும் வாழ்க்கைச் செலவினப்படி உள்ளிட்ட அலவன்ஸ்களுடன் சேர்த்து கிட்டத்தட்ட 1,900 வெள்ளியாக உள்ளது. இது, வறுமைக் கோட்டு வருமானத்திற்கு மிகக் கீழே உள்ள தொகையாகும் என்று அவர் கூறினார்.

மலாக்கா மாநில கியூபாக்ஸ்ஸின் 2022-2025 ஆம் ஆண்டிற்கான பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டிற்கு மாநில செயலாளர் டத்தோ ஜைடி ஜோஹாரி தலைமை தாங்கினார்.  கியூப்பெக்ஸ் மலாக்கா தலைவர் நார்மன் தைப்பும் கலந்து கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.