ALAM SEKITAR & CUACA

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அவசர\ஆரம்ப தேவைகளுக்கு உதவ எம்பிஐ தயாராக உள்ளது

25 செப்டெம்பர் 2022, 9:35 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அவசர\ஆரம்ப தேவைகளுக்கு உதவ எம்பிஐ தயாராக உள்ளது

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 25: சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ ஒதுக்கீடு செய்த கிட்டத்தட்ட பாதி நிதி, ரிங்கிட் 15 லட்சத்தை இந்த ஆண்டு இறுதியில் வெள்ள அவசர உதவிக்கு தயார்படுத்த பயன் படுத்துகிறது.

தோராயமாக 700,000 ரிங்கிட் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைக்கேற்ப விநியோகிக்கப்படும் என்று அதன் நிறுவன சமூகப் பொறுப்பு தலைவர் கூறினார்.

"உலர்ந்த' வகை உணவுகள், மெத்தைகள், தலையணைகள், போர்வைகள் அல்லது பிற தேவைகளை வாங்க இந்த நிதி பயன்படுத்தப்படும். இது பாதிக்கப்பட்டவருக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்தது" என்று அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இந்த விழாவில் ஸ்ரீ செத்தியா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பக்கர் மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அகமது அஸ்ரியின் கூற்றுப்படி, சிலாங்கூர் இளைஞர் அணி திரட்டலின் (PeBS) தன்னார்வத் தொண்டர்கள் உட்பட பல நிறுவனங்களுடன் எம்பிஐ உதவி விநியோகம் ஒன்றுப்பட்டு செயல்படுத்த படுகிறது.

“வெள்ளம் ஏற்படும் போது, தற்காலிக வெளியேற்ற மையத்திற்கு உணவு விரைவாக அனுப்பப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே வெள்ள நிவாரண சூழ்நிலையில் எப்படி ஏற்பாடு  செய்வது என்று ஆலோசிக்கிறோம்," என்றார்.

இந்த ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனம் RM3 கோடி கார்ப்பரேட் சமூகத் துறை ஒதுக்கீட்டில் இருந்து RM15 லட்சத்தை பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒதுக்கீடு செய்தது.

இதுவரை சிலாங்கூர் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,000 பேர் RM400,000 செலவினங்களை உள்ளடக்கிய பலன்களைப் பெற்றுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.