ECONOMY

அடுத்து வரும் மாநில சட்டப் பேரவையில் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது

23 செப்டெம்பர் 2022, 9:57 AM
அடுத்து வரும் மாநில சட்டப் பேரவையில் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 23 - எதிர்வரும் அக்டோபர்  28 ஆம் நாள் 14வது சிலாங்கூர் மாநில சட்டப் பேரவையின் ஐந்தாவது தவணையின் மூன்றாவது கூட்ட தொடரில், 2023 சிலாங்கூர் மாநில பட்ஜெட் மற்றும் கட்சித் தாவல் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.

அடுத்த மாத இறுதியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை நடைபெறும்.

அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக இந்த சந்திப்பு நடைபெறும் என்று மாநில சட்டப் பேரவை செயலாளர் ஜே.கே. காயத்ரி பிரசன்னா கூறினார்.

"அக்டோபர் 28, 2022 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் கூட்டம்,  மந்திரி புசார் பட்ஜெட் தாக்கல் செய்வதில் கவனம் செலுத்தும்" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டாவது கட்டம் அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரையிலும், மூன்றாம் கட்டம் நவம்பர் 7 முதல் நவம்பர் 10 வரையில் நடைபெறும்.

“கூட்டங்கள் காலை 10 மணி தொடங்கி மதியம் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொடரும். வெள்ளிக்கிழமைகளில், காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் தொடரும்.

ஆண் பங்கேற்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் கருமையான அதிகாரப்பூர்வ உடைகளையும், அதே நேரத்தில் பெண் பங்கேற்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஒழுக்கமான கருமை பிளேஸர்களிலும் அணிந்திருக்க வேண்டும். மாநில சட்டப் பேரவைக் கூட்டத்தின் காலம் முழுவதும் ஆடைக் கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட வேண்டும்” என்று காயத்ரி கூறினார்.

ஜூலை 29 அன்று, கட்சி தாவல் சட்ட மசோதாவை தாக்கல் செய்வதன் மூலம், ஏற்கனவே நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட, கட்சி தாவல் அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா (எண் 3) 2022, மாநில சட்டமன்றம் அங்கீகரிக்க வழிவகுக்கும் என்றார் சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.