ஷா ஆலம், செப்டம்பர் 22: கிராமம் மற்றும் மலிவு விலை வீடுகள் மற்றும் வியாபார உரிமக் கட்டணங்கள் மற்றும் மதிப்பீட்டு வரி விலக்கு அடுத்த ஆண்டு தொடர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வரி விலக்கு நடைமுறை சிலாங்கூர் அரசாங்கத்தால் 2016 முதல் தொடரப்படுகிறது.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, RM6.874 கோடி செலவு உள்ளடக்கிய இந்த விலக்கு, சிலாங்கூர் மக்களின் வாழ்க்கை செலவீன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாகும் என்றார்.
"சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் நேற்று (செப்டம்பர் 14) நடந்த குறைந்த விலை வீடுகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான வரி விலக்கு மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான வியாபார உரிமக் கட்டண விலக்கை தொடர முடிவு செய்துள்ளது
இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு முதல் எட்டாவது ஆண்டாக இம்முயற்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
“நம் நாடு இப்போது கோவிட் 19 இன் தொற்று நோய்க்கு பிந்தைய மீட்பு கட்டத்தில் உள்ளது, ஆனால் சராசரி மலேசியர்கள் இன்னும் அதிக பணவீக்க விகிதங்கள், ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் வங்கிகளின் கடன் விகிதத்தில் (OPR) தொடர்ச்சியான அதிகரிப்பால் வீடு மற்றும் வாகன கடன்கள் பாதிப்பு போன்ற சவால்களை எதிர் கொள்கிறார்.
"மக்களின் சுமையைக் குறைக்க உதவும் முயற்சியாக, சிலாங்கூர் அரசாங்கம் 2023 ஆம் ஆண்டில் கிராமம் மற்றும் குறைந்த விலை வீடுகளுக்கான மதிப்பீட்டு வரி மற்றும் வியாபார உரிமக் கட்டணத்தில் விலக்கு அளிக்க முடிவு செய்தது," என்று அவர் கூறினார்.


