கோலாலம்பூர், செப் 22- சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அனைத்துலக மாணவர் ஒருவரை சிரம்பான் போலீசார் கடந்த திங்கள் கிழமை கைது செய்தனர்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்புடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர்ஷியா சஹாடுடின் கூறினார்.
அந்த சந்தேகப் பேர்வழியின் மடிக்கணினி மற்றும் கைப்பேசியில் ஆபாசப் படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த சந்தேகப் பேர்வழி பாதிக்கப்பட்ட சிறார்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.
அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டத்தின் 5 வது பிரிவின் கீழ் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படும் என அவர் சொன்னார்.


