ANTARABANGSA

இலங்கையில் இருந்து 10,000 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய மலேசியா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது

21 செப்டெம்பர் 2022, 11:46 AM
இலங்கையில் இருந்து 10,000 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய மலேசியா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது

கோலாலம்பூர், செப்.21 - தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் நிலையை கருத்தில் கொண்டு 10,000 பணியாளர்களை தருவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கம் 10,000 தொழிலாளர்களின் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய மனிதவளத்தை வழங்குவதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

செப்டம்பர் 14 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு உதவ வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்படும் துறைகளில் பணியமர்த்துவது குறித்து ஒப்புக்கொண்டது.

கோட்டா ஒப்புதல் வழங்கப்பட்டது, லெவி பேமெண்ட்டை செட்டில் செய்த முதலாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சரவணன் கூறினார்.

செப்டம்பர் 14 நிலவரப்படி, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான 416,634 விண்ணப்பங்களுக்கு லெவி பணம் செலுத்தப்பட்டுள்ளது, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு ஆர்வமுள்ள முதலாளிகள் அமைச்சகத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர் மேலாண்மை பிரிவு (oscksm@mohr.gov.my) அல்லது மேலும் தகவலுக்கு தீபகற்ப மலேசிய தொழிலாளர்கள் துறையை (jtksm@mohr.gov.my) தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.