ECONOMY

அடுத்த மாதம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் பார்வை குறைப்பாடு உள்ளவர்களுக்கு இலவச கண்ணாடிகளை மாநில அரசு வழங்கும்.

20 செப்டெம்பர் 2022, 7:09 AM
அடுத்த மாதம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் பார்வை குறைப்பாடு உள்ளவர்களுக்கு இலவச கண்ணாடிகளை மாநில அரசு வழங்கும்.

ஷா ஆலம், செப்டம்பர் 20: அடுத்த மாதம் சிலாங்கூர் பென்யாயாங் திட்ட (ஜேஎஸ்பி) நிகழ்ச்சியின் நான்கு இடங்களில் சிலாங்கூர் சாரிங் பங்கேற்பாளர்களுக்கு மாநில அரசு இலவச கண்ணாடிகளை விநியோகம் செய்யவுள்ளது.

கண் பரிசோதனைக்குப் பிறகு பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த கண்ணாடிகள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசகர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

 "கிள்ளான், உலு சிலாங்கூர், சிப்பாங் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய நான்கு இடங்களில் ஜேஎஸ்பி நடைபெறும். எனவே ஒவ்வொரு இடத்திலும், எந்தவொரு பங்கேற்பாளரும் பிரச்சனையைக் கண்டறிந்தால், அவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்படும்.

"கண் பரிசோதனை தவிர, பொதுமக்கள் உடல், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் சோதனைகள் உட்பட பல சுகாதார பரிசோதனைகளையும் செய்யலாம்," என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

டாக்டர் ஃபர்ஹான் தனது தரப்பு ஜேஎஸ்பி கட்டம் இரண்டில் பல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

"நாங்கள் பல உடல்நலம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்துகிறோம். எனவே சம்பந்தப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும், சட்டமன்ற ரீதியிலான சிலாங்கூர் சாரிங்கை தவறவிட்டவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு சட்டமன்றத்திலும் மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச சுகாதாரப் பரிசோதனைத் திட்டம் செப்டம்பர் 11 அன்று கிட்டத்தட்ட 40,000 பங்கேற்பாளர்களுடன் நடைபெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.