ALAM SEKITAR & CUACA

அடைபட்ட வடிகால்கள் குறித்த புகார்களை வாட்ஸ்அப் மூலம் செய்ய கேடிஇபி கழிவு மேலாண்மை வாரியம் பொது மக்களை அழைக்கிறது.

19 செப்டெம்பர் 2022, 4:20 AM
அடைபட்ட வடிகால்கள் குறித்த புகார்களை வாட்ஸ்அப் மூலம் செய்ய கேடிஇபி கழிவு மேலாண்மை வாரியம் பொது மக்களை அழைக்கிறது.

ஷா ஆலம், செப்டம்பர் 19: பொது மக்கள்  தங்கள்  பகுதி ஓடை, கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு  நீர்  செல்ல தடையாக இருந்தால் அது குறித்த புகார்களை  வாட்ஸ்அப் செயலி மூலம் 019-274 2824 என்ற எண்ணுக்கு  அனுப்பலாம்.

மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, வரும் நவம்பரில் வெள்ளத்தை எதிர்கொள்ள, தயாராக, நல்ல வடிகால் அமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக நிறுவனம் கூறியது.

பொதுமக்கள் அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்வதன் மூலம் நீரோட்டம் சிறப்பாக இருக்கும் படி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

வாய்க்காலில் குப்பை குவியலாக இருந்தால், அதனால் நீர் ஓட்டம் தடைபட்டு, வெள்ளம் ஏற்படும் நிலையை தடுக்க மேலும் கடினமான சந்தர்பத்தை  தவிர்க்க ஒத்துழைப்பு தேவை என அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

அடைக்கப்பட்ட வடிகால்களை தவிர்க்க மக்கள் எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள் கீழ்வருமாறு:

  • வாய்க்காலில் குப்பைகள் குவியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  • வடிகால்களில் குழாய் இணைப்புகளை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
  • வடிகால் அடைக்கப் படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்
  • திறந்தவெளி வாய்க்கால்களுக்கு அருகில் மொத்தமாக

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.