கோலாலம்பூர், செப் 15 - மஇகாவின் தலைவராகவும் மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் அமைச்சராகவும் பதவி வகித்து வந்த துன் சாமிவேலு , தமது 86-வது வயதில் இன்று காலமானார் .
துன் சாமிவேலு, 1979 ஆம் ஆண்டிலிருந்து 2010 -ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் மஇகாவை வழிநடத்தினார்.
அத்துடன் 29 ஆண்டுகள் நீண்ட காலம் அமைச்சரவையில் இருந்து சேவையாற்றியவர்களில் இவரும் ஒருவராவர்.
1983 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் மீண்டும் 1995- ஆம் ஆண்டிலிருந்து 2008 -ஆம் ஆண்டு வரையிலும் பொதுப் பணி அமைச்சராக துன் சாமிவேலு சேவையாற்றியுள்ளார்.
மேலும், 1974 -ஆம் ஆண்டிலிருந்து 2008- ஆம் ஆண்டு வரை சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் .
தமது தந்தையின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவரது புதல்வர் வேல்பாரி தெரிவித்தார்.


