ஷா ஆலம், செப் 14 - ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனப்படும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் திட்டம் சிலாங்கூர் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடரும்.
சபாக்கில் உள்ள டாத்தாரன் பெக்கான் பாகான் தெராப், அபார்ட்மென்ட் பால்மா கால்பந்து மைதானம், பண்டான் இண்டாவில் உள்ள பிளாட் 940, கோத்தா டாமன்சாராவில் ஜாலான் டெக்னாலஜி 3/9 மற்றும் மேருவில் உள்ள சுராவ் ஜாமியா மேரு தெங்கா ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெறும்.
மேலும், காப்பாரில் உள்ள லாமான் டேவான் ஒராங் ராமாய் கம்போங் தோக் மூடா, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மஸ்ஜிட் நூருல் ஏசான், தாமான் மேடானில் உள்ள தாமான் மேடான் மாஜு ஜெயா வணிகப் பகுதி மற்றும் டிங்கிலில் உள்ள தாமான் டிங்கில் ஜெயா இரவு சந்தைத் தளம் ஆகியவற்றிலும் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உணவுத் தலையீட்டுத் திட்டத்திற்கு மாநில அரசு கூடுதலாக 1 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த திட்டத்தில் கோழி, மாட்டிறைச்சி, மீன், கோழி முட்டை, அரிசி மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட ஆறு அடிப்படைப் பொருட்கள் சந்தையை விட 30 சதவீதம் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இத்திட்டம் இந்த ஆண்டு இறுதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறும்.


