கோலாலம்பூர், செப் 13 - உயர் இரத்த அழுத்தம் காரணமாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாகஹ அவருக்கு எதிரான 1மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் (1எம்டிபி) வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் இன்று அவருடைய வழக்கறிஞர் டான்ஶ்ரீ முஹம்மது ஷாபி அப்துல்லா, நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் செகுவேராவிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
எனது கட்சிக்காரர் இன்றும் நாளையும் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது.
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். நேற்று முதல் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை அவருக்குச் சில சோதனைகள் நடத்தப்பட்டது. உடல் நிலை சீராக இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது என ஷாபி சொன்னார்.
.
நிச்சயமாக, இன்று நஜிப் நீதிமன்றம் அவர் வர முடியாது. அவரது உடல்நிலையில் சிக்கல்கள் உள்ளன, ஏனெனில் அவரின் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமாக உள்ளது என்றார் அவர்.
ஆலோசகரின் கூற்றுப்படி, நஜிப் இன்று கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து தேசிய இதய சிகிச்சைக் கழகத்திற்கு (ஐஜேஎன்) மாற்றப்படும்
சாத்தியம் உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
துணை அரசு வழக்கறிஞர் முகமட் முஸ்தபா பி குனியாலம் வழக்கு ஒத்தி வைக்கப்படுவதை ஆட்சேபிக்கவில்லை.


