ALAM SEKITAR & CUACA

சட்டவிரோதமாக குப்பை கொட்டும் தனிநபர்களுக்கு RM1,000 அபராதம் விதிக்கப்படும்

9 செப்டெம்பர் 2022, 9:36 AM
சட்டவிரோதமாக குப்பை கொட்டும் தனிநபர்களுக்கு RM1,000 அபராதம் விதிக்கப்படும்

ஷா ஆலம், செப்டம்பர் 9: ஜாலான் PJS 1/21A இல் சட்டவிரோதமாக மொத்தக் கழிவுகள் கொட்ட பட்டதை பெட்டாலிங் ஜெயா மாநகர சபை (எம்பிபிஜே) நேற்று வெற்றிகரமாக கண்டறிந்தது.

ஊராட்சி மன்றம் சம்பந்தப்பட்ட ஒரு நபரை கைது செய்து, யுயுகே 4 யுகேபிபிஎஸ் (எம்பிபிஜே) 2007 இன் கீழ் RM1,000  தண்டம்  விதிக்கப்பட்டது.

"இடத்தில் உள்ள தேடல் தகவல் மற்றும் அருகிலுள்ள வளாகத்தில் உள்ள ஊழியர்கள் அறிக்கையின் அடிப்படையில், எம்பிபிஜே சந்தேக நபரைக் கண்டுபிடித்து, அவர் கிளானா ஜெயாவில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில் ஊழியராக உள்ளார்.

"பொது இடங்களில் குப்பைகளை போடக்கூடாது என்ற எச்சரிக்கை மற்றும் அறிவுரைக்கு கூடுதலாக RM1,000 அபராதம் விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று எம்பிபிஜே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தளபாடங்கள், மெத்தைகள் மற்றும் திடக்கழிவுகள் போன்ற வீட்டு அல்லது மொத்த கழிவு சேகரிப்பு சேவைகளை முன்பதிவு செய்ய ஐ-கிளீன் சிலாங்கூர் செயலியை பதிவிறக்கம் செய்ய பொதுமக்களை ஊராட்சி மன்றம் கேட்டுக்கொள்கிறது.

பொதுமக்கள் aduan@mbpj.gov.my என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது 03-79542020 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் செய்யலாம். மேலும், எம்பி பிஜே பேஸ்புக்கைப் பார்க்கவும் அல்லது 'எம்பிபிஜே இ-புகார்' செயலியைப் பதிவிறக்கவும்  அறிவுறுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.