ECONOMY

நாட்டில் இப்போது 3,000க்கும் மேற்பட்ட குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையுடைய  ஆரம்ப பள்ளிகள் உண்டு - துணை அமைச்சர்

8 செப்டெம்பர் 2022, 9:31 AM
நாட்டில் இப்போது 3,000க்கும் மேற்பட்ட குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையுடைய  ஆரம்ப பள்ளிகள் உண்டு - துணை அமைச்சர்

புத்ராஜெயா, செப்டம்பர் 8 - நாட்டில் மொத்தம் 3,017 தொடக்கப் பள்ளிகள் குறைவான மாணவர்கள் பதிவுகளை  கொண்டுள்ளன.

அவைகளில்  தற்போது ஒவ்வொன்றும் 150 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளது என்று துணைக் கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் மஹ் ஹாங் சூன் கூறினார்.

இதில் 2,034 தேசியப் பள்ளிகள் (SK), 616 வட்டார சீனப் பள்ளிகள் (SJKC) மற்றும் 367 வட்டாரத தமிழ்ப் பள்ளிகள் (SJKT) ஆகியவை அடங்கும். மொத்தம் 5,877 தேசிய பள்ளிகள், 1,302 தேசிய வகை சீன பள்ளிகள் மற்றும் 527 தேசிய வகை தமிழ் பள்ளிகள் உள்ளன.

" குறைவான மாணவர்கள் பதிவுகளை  கொண்ட பள்ளிகளின்  விவகாரம் கடுமையானது மற்றும் பிரச்சனைக்கான மூல காரணத்தை கண்டறிந்து விரைவான தீர்வு தேவை. சமூக-பொருளாதார மாற்றம், மக்கள் தொகை, காலமாற்றம் மற்றும் பல காரணங்கள் உள்ளன.

"மேலும், கற்பித்தல் மற்றும் கற்றல் தரத்தை மேம்படுத்த வாசிப்புப் பொருட்கள் மற்றும் திட்டங்களை வழங்குதல், மற்றும் பள்ளிகளில் குறைவான சேர்க்கை நிலையை ஏற்படுத்தும் சிக்கல்களை கண்டறிய விரிவான ஆய்வு நடத்தப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

ஆய்வின் முடிவுகளை முன்வைக்க குழு மூன்று மாதங்களுக்குப் பிறகு கூடும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.