ECONOMY

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,055 சிறார் சித்திரவதை சம்பவங்கள் பதிவு

7 செப்டெம்பர் 2022, 8:12 AM
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,055 சிறார் சித்திரவதை சம்பவங்கள் பதிவு

பாசீர் மாஸ், செப் 7- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சிறார் சித்திரவதை சம்பந்தப்பட்ட புகார்களை 1,055 சமூக நலத் துறை பெற்றுள்ளது.

இக்காலக்கட்டத்தில் 578 உடல் ரீதியான துன்புறுத்தல் சம்பவங்களும் 417 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் 60 உளவியல் ரீதியான துன்புறுத்தல் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ சித்தி ஜைலா முகமது யூசுப் கூறினார்.

பதிவானப் புகார்களில் 706 அல்லது 68 விழுக்காடு சிறுமிகளையும் 349 அல்லது 33 விழுக்காடு சிறார்களையும் உட்படுத்தியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

சிறார்களின் நலனில் அக்கறை காட்டாமலிருப்பது  சட்டப்படி குற்றமாகும் எனக் கூறிய அவர்,  2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

சிறார் சித்திரவதையைத் தடுப்பதில் மருத்துவர்கள், சிறார் பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் பெரும் பங்கினை ஆற்ற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்களை இணையம் வழி தடுப்பது தொடர்பான கருத்தரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.