ஜோகூர் பாரு, செப் 6- நேற்று மதியம் இங்கு அருகே உள்ள ஜாலான் பெலாத்தி, தாமான் பெரிண்டஸ்ட்ரியன் மஜு ஜெயா, கெம்பாஸ் என்ற இடத்தில் உள்ள கிடங்கில் போலீசார் நடத்திய சோதனையில் வரி உட்பட RM77 லட்சம் மதிப்புள்ள 1,029 கடத்தல் சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமட் கூறுகையில், மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற சோதனையின் போது, பல்வேறு பிராண்டுகளின் சுமார் 51,000 சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும், யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135(1)(d) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


