கோலாலம்பூர், செப் 6- கனடாவில் நேற்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக டோட்ஜ்பால் போட்டியில் வெற்றியாளராக வாகை சூடிய மலேசிய அணிக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மாட்சிமை தங்கிய பேரரசியார் துவாங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் அக்குழுவினருக்கு தனது சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார்.
அந்த குழுவினர் அனைத்துலக நிலையில் மலேசியாவின் பெயரை பரிமளிக்கச் செய்தது குறித்து தாங்கள் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக மாமன்னர் தம்பதியர் கூறினார்.
இந்த போட்டியில் மிகச் சிறந்த விளையாட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலேசியாவின் கார்லோஸ் கூன்திங்கிற்கும் தாங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக இஸ்தானா நெகாராவின் பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட பதிவில் அவர்கள் குறிப்பிட்டனர்.
அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி மேலும் பல வெற்றிகளை பெற மலேசிய டோட்ஜ்பால் குழுவை தாங்கள் வாழ்த்துவதாக அவர் கூறினர்.


