ஷா ஆலம், செப் 5: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டு தலங்கள், (லிமாஸ்) வருடாந்திர ஒதுக்கீடுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காத வழிபாட்டு தலங்கள் இந்த இணைப்பின் https://limas.selangor.gov.my மூலம் விண்ணப்பிக்கலாம்.
மானியங்கள் இருக்கும் வரை ஒதுக்கீடுகள் அளிக்கப்படும். அதனால், வழிபாட்டு தலங்களின் நிர்வாகங்கள் 2022 ஆம் ஆண்டின் கடைசி கட்டமான 19/9/22 மாலை 5 மணிக்கு முன் விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
-* அதிகாரப்பூர்வ விண்ணப்ப கடிதம் மற்றும் ஆவணங்கள்
- * ROS பதிவுச் சான்றிதழ் நகல்
-* தெளிவான வங்கி இருப்பு அறிக்கை.
-* செலவு அறிக்கை
-* ஆலயம் உள்ள நாடாளுமன்றம்/ சட்டமன்ற தொகுதி உறுப்பினர்/ ஒருங்கிணைப்பாளர்/ கவுன்சிலர்/ சமூகத் தலைவர் ஆதரவு கடிதம்
-* குழு உறுப்பினர்களின் பட்டியல்
-* மலேசிய இந்து சங்கம் / மலேசிய இந்து தர்ம மாமன்ற சான்றிதழ்
இது தொடர்பாக, மேலும் தகவல்களுக்கு 017-306 7591 (ஆசிரியர் அனான்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.


