ECONOMY

கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 1,903ஆக குறைந்தது

5 செப்டெம்பர் 2022, 4:18 AM
கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 1,903ஆக குறைந்தது

ஷா ஆலம், செப் 5- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று இந்நோயினால் 1,903 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,240 ஆகவும் சனிக்கிழமை 2,328 ஆகவும் இருந்தது.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய புதிய தொற்றுகளுடன் சேர்த்து இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 53 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 நோய்தொற்றுக்கு நேற்று பலியான இருவருடன் சேர்த்து இந்நோய் காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,245 ஆக ஏற்றம் கண்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 3,138 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 26 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.