கோலாலம்பூர், செப் 4- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தேசிய இருதய கழகத்திலிருந்து (ஐ.ஜே.என்.) சிகிச்சைப் பெற்று இன்று காலை 9..30 மணியளவில் வீடு திரும்பினார்.
வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை டாக்டர் மகாதீர் வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டிருப்பார் என்று அவரது அலுவலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
டாக்டர் மகாதீருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டத்தைத் தொடர்ந்து அவர் ஐ.ஜே.என்.னில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.


