ECONOMY

தேசிய தின கொண்டாட்டங்களில் மக்கள் ஆளில்லா விமானங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது

29 ஆகஸ்ட் 2022, 3:03 PM
தேசிய தின கொண்டாட்டங்களில் மக்கள் ஆளில்லா விமானங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29: ஆகஸ்ட் 31- ஆம் தேதி டத்தாரான் மெர்டேகாவில் தேசிய தினம் 2022 கொண்டாடப்படுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் இது பொதுமக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தேவையற்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கும், ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ்  எனப்படும்  ஆகாய படை பிரிவு, சுற்றியுள்ள பகுதியில் தாழ்வான விமானங்களை இயக்கி வரும் வேளையில், ட்ரோன்களால்  விமானங்களுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுவதாக கூறியது.

"இந்த நாட்டில் அனைத்து ட்ரோன் நடவடிக்கைகளும் சிவில் ஏவியேஷன் சட்டம் 1969 (சட்டம் 3), ஒழுங்குமுறை 98, 140-144, மலேசிய சிவில் ஏவியேஷன் விதிமுறைகள் (எம்சிஏஆர் 2016) மற்றும் சிவில் ஏவியேஷன் உத்தரவுகள் (சிஏடிகள்) பிரிவு 4 க்கு உட்பட்டது என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுவதாக தெரிவித்தது.

சட்டம் 3 இன் பிரிவு 4 இன் கீழ் உள்ள குற்றங்களுக்கு, RM500,000க்கு மிகாமல் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

"விதிமுறை 206(3) MCAR 2016 இன் படி, சம்பந்தப்பட்ட நபர் ஒரு தனிநபராக இருந்தால், RM50,000க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது மூன்று வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது இரண்டும் அல்லது அந்த நபர் ஒரு நிறுவன அமைப்பாக இருந்தால் RM100,000க்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.