ஷா ஆலம், ஆகஸ்ட் 24: வெள்ள நீரைக் கட்டுப்படுத்த இணைப்பு அமைப்பை உருவாக்கி சிலாங்கூர் முழுவதும் உள்ள 98 குளங்கள் மற்றும் ஏரிகளைப் பயன்படுத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது.
உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம், இதுவரை சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) மூலம் தாங்கள் 21 குளங்களை நெட்வொர்க் அமைப்புடன் இணைக்கும் பணிக்கான ஆரம்ப கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
"மொத்தத்தில் 98 குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளன, வெள்ள நீரை கட்டுப்படுத்தவும், வறட்சியின் போது பயன்படுத்தவும் அவற்றை நாம் பன்படுத்தி, படிப்படியாக நதி அமைப்புடன் இணைப்போம்.
“கனமழைக்கு நீரை தேக்கவும் என்று பிறகு குளநீரை ஆற்றில் பாய்ச்சவும் வறட்சியின் போது தேவைப்பட்டால் அதைப் பயன்படுத்தலாம்,” என்று அவர் கூறினார்.
சுல்தான் சலாவுடின் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற வெள்ளப் பிரச்னையைச் சமாளிக்கும் மாநில அரசின் திட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மொத்தத்தில் அனைத்து குளங்களிலும் 3.4 கோடி கன மீட்டர் நீர் தேக்க முடியும், இது வறட்சியின் போது தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது என்று இஷாம் கூறினார்.
“இந்த குளங்கள் மட்டும் ஒரு மாதத்திற்கு ஒரு நாளைக்கு 200 கோடி லிட்டர் தண்ணீரை வழங்க முடியும். இதில் ஏற்கனவே உள்ள அணைகள் சேர்க்கப்படவில்லை.
இந்த 98 குளங்கள் மற்றும் ஏரிகள் புதியவை, அதாவது நீண்ட நாட்களாக இருந்தும், பயன்பாட்டுக்கு சேர்க்கப் படாதவை என்றார் அவர்.


