ஷா ஆலம், ஆக 23- சுமார் 250 கிலோ உணவு திடக்கழிவு பொருள்களை தொழுஉரம் மற்றும் எரிபொருளாக மாற்றுவதற்கான பதனீட்டு நடவடிக்கையில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக எனாரோபிக் டைஜஸ்டர் எனும் இயந்திரம் மூலம் 81.5 கிலோ சோறு மற்றும் 172.9 கிலோ உணவு கழிவுப் பொருள்கள் பிரித்தெடுக்கப்பட்டதாக நகராண்மை கழகம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சேகரிக்கப்படும் உணவுக் கழிவுப் பொருள்கள் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தொழு உரமாகவும் எரிபொருளாகவும் மாற்றப்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா? என நகராண்மைக் கழகம் அந்த பதிவில் வினவியுள்ளது.
பயன்படுத்துவதற்கு பாதுகாப்பான மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தாத இத்தகைய இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் நகராண்மைக் கழகம் கூறியது.


