கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: மலேசிய குடிநுழைவு துறையின் பெயரைப் பயன்படுத்தி, போலியான பேஸ்புக் கணக்கின் விளம்பரங்களில் ஏமாறாமல் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிக்கையில், திணைக்களத்தின் லோகோவைப் பயன்படுத்தி ஒரு போலி கணக்கு இருப்பதாகவும், மேலும் மலேசிய குடிநுழைவு தலைமை இயக்குநர் (டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டவுட்) பெயரைப் பயன்படுத்தி ஊடக அறிக்கையைப் பதிவேற்றிய தாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான தகவல்கள் ஏதேனும் இருப்பின் உடனடியாக அவரது தரப்புக்கு தெரிவிக்கவும், இதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
"மேலும் தகவல்களுக்கு போர்ட்டல் (https://www.imi.gov.my) மற்றும் மலேசியாவின் குடிநுழைவு துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கை பார்க்கலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


