கிள்ளான் , ஆகஸ்ட் 22 , அம்னோவின் முன்னால் அமைச்சரும் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ நஸ்ரி அப்துல் அசிஸ் ம.இ.காவின் தேசிய தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரனை ஒரு தொகுதியை விட்டு இன்னொரு தொகுதிக்கு ஓடும் விபச்சாரி என்று குறிப்பிட்டுள்ளதாக திசைகள் ஒலிபரப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள சில விவரங்கள் சமுதாயத்திற்கு மிக முக்கியமானது என்பதால், ம.இ.கா தேசிய தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் இந்திய சமுதாயத்திற்கு சரியான விளக்கம் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார் கிள்ளான் கோத்தா ராஜா தொகுதி கெஅடிலான் தலைவர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்.
இந்திய சமுதாய மேம்பாட்டுக்காக அரசாங்கம் ஒதுக்கிய மித்ரா நிதி குறித்து ம.இ.கா இந்தியர்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்றும், கோவிட்19 நோய்த் தொற்றுக்குப் பின் இந்திய சமுதாய மேம்பாட்டுக்காக ஒரு பெரிய தொகையை சமுதாயத்திற்கு தொழில் பயிற்சி அளிக்க அரசாங்கம் ம.இ.கா வுக்கு வழங்கியதாகவும் அதில் எந்த திட்டமும் செயல் படுத்தாமல் நிதியை காலி செய்துள்ளதாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு முன்னால் அமைச்சரான டத்தோ ஶ்ரீ நஸ்ரி அப்துல் அசிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிதி வழங்கப்பட்டது இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு என்பதால் இந்த குற்றச்சாட்டுக்கு ம.இ.கா தலைவர் பதிலளிக்காமல் இருக்க கூடாது,
அரசாங்கம் எத்தனை மில்லியன் வழங்கியது, என்ன திட்டத்திற்கு வழங்கியது, ம.இ.கா. அதில் எந்த திட்டத்தை மேற்கொண்டது. அல்லது அந்த நிதியை எவரெவர் பெற்றுக்கொண்டனர் என்று விவரங்களை இந்திய சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்று செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக்கொண்டார்.
கிள்ளான் கோத்தா ராஜா தொகுதி கெ அடிலான் தலைவரும், செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பத்திரிக்கை அறிக்கை. 22\8\2022


