ஷா ஆலம், ஆகஸ்ட் 22: சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ, சுதந்திரமாதக் கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்த, பழைய ஜாலூர் கெமிலாங்கிற்குப் பதிலாக புதிய ஒன்றை வழங்க தயாராக உள்ளது.
இங்குள்ள டாருல் ஏசான் கட்டிடத்தைச் சுற்றியுள்ள 20 கொடிகள் புதிய கொடிகளால் மாற்றப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி நோரிடா முகமட் சிடெக் தெரிவித்தார்.
" ஷா ஆலமை சுற்றி பழமையான, பழுதடைந்த கொடியை கண்டால் அதை புதிதாக மாறறுவோம். இந்த கட்டிடத்தில் இருப்பது போல் புதிய கொடிகளுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம்" என்று அவர் இன்று கூறினார்.
இங்குள்ள டாருல் ஏசான் கட்டிடத்தில் சிலாங்கூர் மலேசிய ஆயுதப்படை வீரர்களுடன் (ஏடிஎம்) எம்பிஐ சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கு பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
விழாவில், எம்பிஐ சங்கத்திற்கு RM10,000 நன்கொடையும், கலந்து கொண்ட 10 முன்னாள் வீரர்களுக்கு RM500 நன்கொடையாக வழங்கினார்.


