ஷா ஆலம், ஆக 22- இங்குள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் திடலில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சிலாங்கூர் எஃப்.சி. குழு பி.ஜே.சிட்டி எஃப்.சி. குழுவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
பி.ஜே.சிட்டி குழுவின் ஒரே கோலை டேரன் லோக் ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் போட்டார். சிலாங்கூர் அணியின் தற்காப்பு அரணை வெற்றிகரமாக ஊடுருவி டேரன் போட்ட அந்த வெற்றிக் கோல் அக்குழுவை முன்னணிக்கு கொண்டு வந்தது.
அந்த தேசிய தாக்குதல் ஆட்டக்காரரின் அந்த வெற்றிக் கோலின் வாயிலாக பி.ஜே.சிட்டி எஃ.ப்.சி. குழு மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெற்றுள்ளது.
ரெட் ஜெயண்ட் என அழைக்கப்படும் சிலாங்கூர் அணி பல்வேறு வியூகங்களை வகுத்த போதிலும் கோல் போடுவதற்கு அது மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் எதிரணி ஆட்டக்காரர்கள் வெற்றிகரமாக தடுத்து விட்டனர்.
இந்த சூப்பர் லீக் போட்டியில் சிலாங்கூர் எஃப்.சி. அணிக்கு ஏற்பட்ட நான்காவது தொடர்ச்சியான தோல்வி இதுவாகும்.


