ECONOMY

நாட்டில் நேற்று 2,793 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி- 7 மரணங்கள் பதிவு

21 ஆகஸ்ட் 2022, 6:32 AM
நாட்டில் நேற்று 2,793 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி- 7 மரணங்கள் பதிவு

ஷா ஆலம், ஆக 21- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 2,793 ஆக பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,490 ஆக இருந்தது.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 17 ஆயிரத்து 263 ஆக உயர்ந்துள்ளதாக கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய நிலவரப்படி 40,417 பேர் கோவிட்-19 நோயின் கடும் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 39,379 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வேளையில் 1,379 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 61 தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 29 பேர் தனிமைப்படுத்தும் மையங்களிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று கோவிட்-19 தொடர்புடைய 7 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 36,136 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.