ஷா ஆலம், ஆகஸ்ட் 20: மாநிலத்தில் வெள்ளத் தணிப்பு திட்டங்களைச் செயல்படுத்த 470 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க ஐந்து தணிப்பு திட்டங்களை நிர்மாணிப்பதற்காக என கூறினார்.
"சிலாங்கூரில் 470 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் ஐந்து முக்கிய வெள்ளத் தணிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
"மக்களின் நல்வாழ்வையும், மாநிலத்தின் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் கடுமையான வெள்ளத்தைத் தடுக்க இந்த முயற்சி உடனடியாக செயல்படுத்தப்படும்," என்று அவர் இன்று கூறினார்.
இங்குள்ள ஷா ஆலம் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த மலேசிய குடும்ப உணர்வு திட்ட நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
12வது மலேசியத் திட்டத்தின் (RMK12) இரண்டாவது திருத்தக் கூடிய திட்ட ஆண்டு 2022ன் கீழ் சிலாங்கூரில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சேவை வழங்கல் வசதிகளை செயல்படுத்த ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட RM630 கோடி நிதியில் RM470 கோடி ஒதுக்கீடு ஒரு பகுதியாகும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.


