ECONOMY

சிலாங்கூரின் வீட்டு வாடகை திட்டத்திற்கு 3,000 ரூமா இடாமான் யூனிட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

20 ஆகஸ்ட் 2022, 7:38 AM
சிலாங்கூரின் வீட்டு வாடகை திட்டத்திற்கு 3,000 ரூமா இடாமான் யூனிட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

அம்பாங், ஆகஸ்ட் 20: சிலாங்கூரின்  வீட்டு வாடகை திட்டத்திற்கு  மொத்தம் 3,000 ரூமா இடாமான் `யூனிட்கள் உள்ளன என்று வீட்டுவசதி ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

டத்தோ மந்திரி புசார் அறிவித்துள்ள இத்திட்டம் எதிர்காலத்தில் வீடு வாங்க முடியாத மக்களுக்கு உதவுதல் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

"மூன்று ஆண்டுகளுக்குள் வீட்டை சொந்தமாக்குவதற்கு முன், அவர்கள் அந்த வீடுகளை RM600 முதல் RM800 வரை நியாயமான கட்டணத்தில் முதலில் வாடகைக்கு பெறலாம்.

“அடுத்த செப்டம்பரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் 3,000 யூனிட்களை வாடகைக்கு எடுத்து மக்களுக்குச் சொந்தமாக்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், இந்த குடியிருப்பை சொந்தமாக்குவதற்கு முன், அவர்களின் கட்டண உறுதிப்பாட்டைப் பார்ப்போம்," என்று அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ரூமா இடாமான் அபிவிருத்தி செய்யப்படும் பகுதிகளில் காஜாங், கோலா சிலாங்கூர் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் ஆகியவை அடங்கும் என்று ரோட்சியா மேலும் கூறினார்.

முன்னதாக, டத்தோ மந்திரி புசார் சிலாங்கூரில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் முதல் வீடுகளை சொந்தமாக்குவதற்கு ஆறு ஐடியல் ஹோம் திட்டங்களைக் கட்டுவதாக அறிவித்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கூற்றுப்படி, ஒவ்வொரு யூனிட்டும் 1,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது, மூன்று படுக்கையறைகள் மற்றும் இரண்டு குளியலறைகள் கொண்ட நடைமுறை வடிவமைப்பு, RM250,000 க்கு விற்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.