ஷா ஆலம், ஆக 19- நாட்டில் நேற்று முன்தினம் 3,516 ஆக இருந்த தினசரி கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கை நேற்று 4,071 ஆக அதிகரித்துள்ளது.இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் பதிவான மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 49,000 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
கோவிட்-19 நோயாளிகளில் 42,476 கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
அவர்களில் 40,826 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 1,542 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 81 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 27 பேர் தற்காலிக மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நேற்று 7 பேர் மரணமடைந்தனர். தொற்றுநோய் நாட்டைத் தாக்கியதில் இருந்து இதுவரை மொத்தம் பேர் 36,124 உயிரிழந்துள்ளனர்
ECONOMY
கோவிட்-19: நேற்று 4,071 பேர் பாதிப்பு- எழுவர் மரணம்
19 ஆகஸ்ட் 2022, 4:53 AM


