ECONOMY

நாட்டில் வாகன விற்பனை 48% அதிகரிப்பு- ஜூலை 380,595 வரை வாகனங்கள் கொள்முதல்

19 ஆகஸ்ட் 2022, 3:16 AM
நாட்டில் வாகன விற்பனை 48% அதிகரிப்பு- ஜூலை 380,595 வரை வாகனங்கள் கொள்முதல்

ஷா ஆலம், ஆக 19- மலேசியாவில் கடந்த ஜூலை மாதம் விற்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 48,922 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்தாண்டின் இக்காலக்கட்டத்தில் 7,499 வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன.

இவ்வாண்டு ஜூலை மாதம் பயணிகள் வாகன விற்பனை அபரிமித உயர்வு கண்டு 43,597 ஆகப் பதிவாகியுள்ளதாக மலேசிய ஆட்டோமோட்டிவ் சங்கம் கூறியது.கடந்தாண்டு ஜூலை மாதம் 5,343 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு ஜூலையில் 2,156 ஆக இருந்த வர்த்தக வாகன விற்பனையும் இவ்வாண்டு அதே காலக்கட்டத்தில் 5,328 ஆக உயர்வு கண்டுள்ளது என்று அச்சங்கத்தை மேற்கோள் காட்டி பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் வாகன விற்பனை 380,595 ஆக பதிவாகியுள்ள நிலையில் கடந்தாண்டு 256,677 ஆகப் பதிவாகியிருந்தது. பயணிகள் வாகன எண்ணிக்கை 229,148 லிருந்து 337,331 ஆகவும் வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை 37,529 லிருந்து 43,264 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.

கடந்தாண்டின் முதல் ஏழு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் வாகனங்களின் விற்பனை 48 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.