ECONOMY

நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான  நீரளிப்பு  மாசுபடும் போது மாற்று நீர் விநியோக முறை, நீர் சுத்திகரிப்பு  நிலையத்தின் பணி இடையூறை  தவிர்க்கிறது

18 ஆகஸ்ட் 2022, 3:44 PM
நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான  நீரளிப்பு  மாசுபடும் போது மாற்று நீர் விநியோக முறை, நீர் சுத்திகரிப்பு  நிலையத்தின் பணி இடையூறை  தவிர்க்கிறது

சிப்பாங், 18 ஆகஸ்ட்: சிலாங்கூரில் உள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (எல்ஆர்ஏ) ஆற்றங்கரை நீர் தேக்கம் (TAPS) முறையைச் செயல்படுத்துகிறது, இதனால் மாசு ஏற்பட்டால்  நீர் சுத்திகரிப்பு  நிலையத்தின் பணி இடையூறு அபாயத்தை குறைக்கிறது.

இவ்வாறு செயல்படுத்துவதன் மூலம் எல்ஆர்ஏ  செமினி 2, லாபோஹான் டாகாங் மற்றும் சுங்கை லாபு ஆகியவை மூல நீர் ஆதாரம் மாசுபட்டால் குளம் நீர்த்தேக்கத் தண்ணீரைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்று சிலாங்கூர் நீர் மேலாண்மையின் (ஆயர் சிலாங்கூர்) செயல்பாட்டு தலைவர் கூறினார்.

"ஒவ்வொரு நீர் சுத்திகரிப்பு  நிலையத்திற்கும்  அதன் சொந்த நீர்த்தேக்கம் உள்ளது. இந்தக் குளம் ஆற்றங்கரையின் கீழ்ப் பகுதியில் அல்லது ஆலைக்கு அருகில் அமைந்துள்ளது.

"நீர் ஆதாரம் மாசுபட்டால், ஆலையை மூடிவிட்டு, இந்தக் குளத்தில் இருந்து நீர்த்தேக்கத் தண்ணீரைப் பயன் படுத்தும். இந்த முறை பயனுள்ளதாக இருப்பதை நாங்கள் காண்கிறோம், ”என்று இர் அபாஸ் அப்துல்லா இன்று எல்ஆர்ஏ செமினி 2 இல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

18 ஆகஸ்ட் 2022 அன்று சிப்பாங், எல்ஆர்ஏ செமினி 2 டிங்கிலில் ஊடகவியலாளர்களுடன் சென்றபின் செய்தியாளர் சந்திப்பின் போது சிலாங்கூர் நீர் இயக்கத் தலைவர் ஐஆர் அபாஸ் அப்துல்லா கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவரைப் பொறுத்தவரை, TAPS ஆனது சுங்கை ராசாவ் எல்ஆர்ஏக்கு விரிவுபடுத்தப்படும், இது RM300 கோடி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய 2025 ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தற்போது குறித்த ஆலை ஒரு நாளைக்கு 700 லிட்டர் கொள்ளளவு உற்பத்தி செய்கிறது, ஆனால் இது செயல்படுத்தப்படும் போது, மொத்தம் 1,400 லிட்டர் தண்ணீரை வினியோகிக்க முடியும்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இதுவரை மூன்று மாசு சம்பவங்களில் மட்டுமே சுத்திகரிப்பு நிலையம் செயல் படுவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அபாஸ் கூறினார்.

"மாசுபாட்டைக் கடக்க மாநில அரசு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் மூல நீர் உத்தரவாதத் திட்டம் (SJAM) மற்றும் நீர் ஆதாரங்களைக் கண்காணிக்கும் உறுப்பினர்கள் ஆகும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.