ECONOMY

பிளாட்ஸ் திட்டத்தில் பங்கேற்க வர்த்தகர்களுக்கு மந்திரி புசார் அழைப்பு

18 ஆகஸ்ட் 2022, 7:52 AM
பிளாட்ஸ் திட்டத்தில் பங்கேற்க வர்த்தகர்களுக்கு மந்திரி புசார் அழைப்பு

ஷா ஆலம், ஆக 18- இணையம் வாயிலாக தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் (பிளாட்ஸ்) திட்டத்தில் பங்கேற்கும்படி வணிகர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆர்வமுள்ள வணிகர்கள்  என்ற அகப்பக்கம் வாயிலாக பிளாஸ் இலக்கவியல் வணிகத் திட்டத்தில் பதிவு செய்யலாம் என்று அவர் சொன்னார்.

இந்த பிளாட்ஸ் திட்டத்தில் கடந்தாண்டு 10,045 பேர் இணைந்திருந்த வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 14,470 ஆக  அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் பங்கேற்றதன் மூலம் அவர்கள் கூடுதல் வருமானத்தை ஈட்டியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் வர்த்தகத்தை  இரட்டிப்பாக்குவதற்குரிய ஆற்றலை பிளாட்ஸ் கொண்டிருப்பது இதன் வழி நிரூபணமாகியுள்ளது என்றார் அவர்.

கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து இலக்கவியல் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மாநில அரசு ஈராண்டுகளுக்கு முன்னர் ரமலான் மாதத்தின் போது இந்த பிளாட்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.