ஷா ஆலம், ஆக 18- அமலாக்கப் பிரிவு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சுபாங் ஜெயா மாநகர் மன்றம் நேற்று சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சுபாங் ஜெயா, யு.எஸ்.ஜே. 7 பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு டத்தோ பண்டார் ஜோஹாரி தலைமையேற்றதாக மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த நிகழ்வில் எம்.பி.எஸ்.ஜே.அமலாக்கப் பிரிவின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதோடு அமலாக்கப் பிரிவின் இயக்குநர் மற்றும் நான்கு சார்ஜன்கள் மற்றும் 12 கார்ப்ரல்களுக்கு டத்தோ பண்டார் பதக்கங்களையும் அணிவித்தார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமலாக்கப் பிரிவு சவால்களை எதிர்கொள்வதில் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வந்துள்ளதாக டத்தோ பண்டார் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த 239 அமலாக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


