ஷா ஆலம், ஆக 18- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற திடலில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சிலாங்கூர் குழு திரங்கானு எஃப்.சி. குழுவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
திரங்கானு குழுவின் முதல் கோலை மத்திய திடல் ஆட்டக்காரர் ஹபிப் ஹருண் ஆட்டத்தின் 13 வது நிமிடத்தில் அடித்த வேளையில் இரண்டாவது கோலை மேனி ஊட் 39வது நிமிடத்தில் புகுத்தினார்.
ஆகக் கடைசி நிலவரப்படி சிலாங்கூர் அணி சூப்பர் லீக் பட்டியலில் 16 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. திரங்கானு 23 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆட்டத்தைக் காண 2,250 ரசிகர்கள் அரங்கிற்கு வந்திருந்தனர். இரவு 9.00 மணிக்கு தொடங்கிய ஆட்டம் 10.54 மணிக்கு முடிவுற்றது.


