கோலாலம்பூர், ஆக 18- சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த தேசிய கொடிகளை கத்தரிக்கோலால் வெட்டிய ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தலைநகர் ஜாலான் அம்பாங்கில் உள்ள மலேசிய சுற்றுலா மையத்தின் (மேட்டிக்) எதிரே நேற்று மாலை நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை தாங்கள் எந்தப் புகாரையும் பெறவில்லை என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெலிஹான் யாஹ்யா கூறினார்.
தேசிய கொடி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து புகார் எதனையும் நாங்கள் பெறவில்லை. இருந்த போதிலும் அச்செயலைப் புரிந்த ஆடவரை நாங்கள் தேடி வருகிறோம் என அவர் சொன்னார்.
சிவப்பு சட்டையும் நீல நிற தொப்பியும் அணிந்த ஆடவர் ஒருவர் நடைபாதையில் பொருத்தப்பட்டிருந்த தேசிய கொடிகளை கத்தரிக்கோலால் வெட்டும் 37 விநாடி காட்டி டிக் டாக் செயலியில் பகிரப்பட்டது.


