ஷா ஆலம், ஆக 17- இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை மோரிப் தொகுதியிலுள்ள 22 பள்ளிகளுக்கு 80,000 வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
தொகுதியிலுள்ள தேசிய பள்ளிகள், ஆரம்ப சமயப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டதாக தொகுதி உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.
விண்ணப்பம் மற்றும் தேவையின் அடிப்படையில் அப்பள்ளிகளுக்கு வெ.2,000 முதல் வெ.10,000 வரை நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
பள்ளிகளை சீரமைப்பது, நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டங்களை நடத்துவதற்கு ஆகிய நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதியுதவி பள்ளி நிர்வாகங்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்கும் என்பதோடு மாணவர்களும் உகந்த சூழலில் கல்வி கற்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என அவர் சொன்னார்.
நிதியுதவி தேவைப்படும் பள்ளிகள் 03-31802191 என்ற எண்களில் அல்லது தொகுதி சேவை மையத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.


