ஷா ஆலம், ஆக 16- வரும் அக்டோபர் 6 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டு பெவிலியன் சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சியில் (எஸ்.ஐ.இ.) பங்கேற்க தொழில் முனைவோருக்கு யாயாசான் ஹிஜ்ரா அழைப்பு விடுத்துள்ளது.
இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் ஆதரவிலான இந்த கண்காட்சி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (கே.எல்.சி.சி.) நடைபெறும் என்று ஹிஜ்ரா அறவாரியம் கூறியது.
இந்த கண்காட்சியில் உணவு மற்றும் பானங்கள் தொடர்பான பிரிவுக்கு முக்கியத்துவம் தரப்படும். இந்த கண்காட்சியில் பங்கேற்பதக்கு தகுதியான தொழில்முனைவோரை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அது தெரிவித்தது.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் மாநில நிலையிலும் அனைத்துலக அளவிலும் சந்தைகளில் ஊடுருவதற்குரிய வாய்ப்பினை தொழில்முனைவோர் பெற முடியும் என்றும் அந்த வாரியம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ஆர்வமுள்ள தொழில்முனைவோர் https://forms.gle/kZXhe6KvnieMxy1t6 என்ற அகப்பக்கம் வாயிலாக தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கான இறுதி நாள் செப்டம்பர் 2 ஆம் தேதியாகும். ஆர்வமுள்ள தொழில்முனைவோர் நுழைவுக் கட்டணமாக 200 வெள்ளியைச் செலுத்த வேண்டும்.


