ECONOMY

தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களுக்கான வசதிகள், மற்றும் கற்றல் தரத்தை மேம்படுத்த 60 லட்சம் ரிங்கிட்.

14 ஆகஸ்ட் 2022, 2:26 PM
தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களுக்கான வசதிகள், மற்றும் கற்றல் தரத்தை மேம்படுத்த 60 லட்சம் ரிங்கிட்.

கிள்ளான், ஆகஸ்ட் 14: தேசிய வகை தமிழ் பள்ளிகளுக்கு (SJKT) வசதிகளை மேம்படுத்தவும், தமிழ்ப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் மொத்தம் 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடுகள்  சிலாங்கூர் மாநில அரசு செய்து வருகிறது.

இதுவரை கிட்டத்தட்ட அனைத்து 96 தேசிய வகை தமிழ் பள்ளிகளும் பயனடைந்துள்ளதாகவும், சில பள்ளிகள் RM200,000 வரை நன்கொடையாகப் பெற்றுள்ளதாகவும் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

அடுத்தகட்ட “உதவியை அனுப்புவதற்கான செயல்முறை நடந்து வருகிறது. இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் அதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் சில பள்ளிகள் இடமிருந்து அதைப் பெறவில்லை.

‘ஆரம்பத்தில் சில விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாததாலும்,  போதிய விவரங்களை அனுப்பாத காரணங்களால் தாமதமான மானிய விநியோகம், இப்போது, அடுத்த கட்ட நிதி அளிப்பில் இடம் பெறப் பணிகள் நடந்து வருகிறது. எனவே செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் கட்ட நிதியளிப்பு தொடங்கும் என்றார் அவர்.

நாம் தமிழ்ப்பள்ளி  மாணவர்களுக்கு  அளித்துவரும் பெரும் தொகை,  தமிழ்ப்பள்ளியில் வசதி மற்றும் கற்றல் தரத்தை மேம்படுத்த உண்மையான  நோக்கத்தை அவ்வரசு கொண்டுள்ளது  என்பதை உணர்த்தும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இன்று கிள்ளான் ஶ்ரீ அண்டாலாஸ் விளையாட்டுக் மண்டபத்தில் முஹிபா கிண்ணக் கபடி போட்டியை ஆரம்பித்து வைத்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மே மாதம், டத்தோ ஶ்ரீ அமிருடின் மாநிலத்தில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2.65 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

மத்திய அரசின் முழு மானிய உதவியை பெறாத பள்ளிகளுக்கான மாநில அரசின் நிதி பங்களிப்புகள் மிகத் தேவையான ஒன்றாக விளங்கி வருகிறது என்பதை மக்கள் அறிவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.