ECONOMY

புதிய கோவிட்-19 தொற்றுகள் 4,831 ஆக பதிவு

12 ஆகஸ்ட் 2022, 8:00 AM
புதிய கோவிட்-19 தொற்றுகள் 4,831 ஆக பதிவு

ஷா ஆலம், ஆகஸ்ட் 12: புதிய கோவிட்-19 நோய்த் தொற்றுகள் சிறிதளவு குறைந்துள்ளது, ஆனால் நேற்று முன்தினம் 4,896 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது நேற்று 4,831 சம்பவங்களாக பதிவு.

கோவிட்நவ் தரவுகளின்படி, அந்த எண்ணிக்கையில் ஆறு சம்பவங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, மீதமுள்ள 4,825 சம்பவங்கள் உள்ளூர் தொற்றுகள், இதனால் நாட்டில் மொத்த நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 4,686,237 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தம் 3,362 பேர் குணமடைந்து, ஒட்டுமொத்த எண்ணிக்கை  4,642,078 ஆக உள்ளது.

அதே நேரத்தில், மொத்தம் 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில், சுகாதார வசதிகளுக்கு வெளியே (BID) இரண்டு இறப்புகள். இது மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 36,066 ஆகவும், சுகாதார வசதிகளுக்கு வெளியே 7,667 ஆகவும் பதிவாகியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.