ECONOMY

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் 95 விழுக்காடு சீரடைந்தது

12 ஆகஸ்ட் 2022, 6:10 AM
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் 95 விழுக்காடு சீரடைந்தது

ஷா ஆலம், ஆக 12- லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்தின்  பணிகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட  பகுதிகளில் நீர் விநியோகம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 95 விழுக்காட்டை எட்டியது.

பெட்டாலிங் மாவட்டத்தில் 100 விழுக்காடும்  உலு லங்காட்

98 விழுக்காடும்  கோலாலம்பூரில் 91 விழுக்காடும் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளதாக பென்குருசன் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 397 பகுதிகளிலும் இன்று இரவு 8 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும் என  எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

பயனீட்டாளர்களின்  இருப்பிடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து  பகுதிக்கு பகுதி நீர் விநியோக நேரம்  வேறுபடும் என்று  இன்று தனது முகநூல் பதிவில் அந்நிறுவனம் கூறியது.

நேற்று  காராக்-பெந்தோங் நெடுஞ்சாலையின் 75.9 கிலோ மீட்டரில் நிகழ்ந்த  விபத்தைத் தொடர்ந்து பகாங்கின் சுங்கை செமந்தன் ஆற்றில் இரசாயனம் கலந்த  காரணத்தால்  லங்காட் 2  நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.