ECONOMY

எதிர்த்திசையில் வாகனம் ஓட்டிய வயதானவர் முதுமை மற்றும் மறதி நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்

11 ஆகஸ்ட் 2022, 4:54 AM
எதிர்த்திசையில் வாகனம் ஓட்டிய வயதானவர் முதுமை மற்றும் மறதி நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்

ஷா ஆலம், ஆகஸ்ட் 11: பெர்சிசியன் பந்தாய் பாராட் விரைவுச் சாலையின் கிலோமீட்டர் 211 இல் எதிர்த்திசையில் வாகனம் ஓட்டியதற்காக முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெர்சடிஸ் காரை ஓட்டிய 83 வயது முதியவர் அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டவர், அவர் ஆயேர் தாவாரில் கம்போங் பாருவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

மஞ்சுங் மாவட்ட காவல்துறைத் தலைவரின் கூற்றுப்படி, சமூக ஊடகங்களில் வைரலான ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின் உறுப்பினர்கள் நேற்று முதியவரை கண்டுபிடித்தனர்.

"சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 79(2)ன் படி எதிர்த்திசையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது" என்று உதவி ஆணையர் நோர் ஓமர் சப்பி கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் வாகனத்தின் உரிமையாளர் அல்சீமர் நோயாலும் முதுமை அறிகுறிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.