ECONOMY

பகாங் மாநில பி.கே.ஆர்.  தலைவராக  அமிருடின் ஷாரி நியமனம்

8 ஆகஸ்ட் 2022, 2:59 AM
பகாங் மாநில பி.கே.ஆர்.  தலைவராக  அமிருடின் ஷாரி நியமனம்

கோலாலம்பூர், ஆக 8- பகாங் மாநில  பி.கே.ஆர். கட்சியின் புதிய தலைமைத்துவ மன்றத் தலைவராக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2022-2025 தவணைக்கு இப்பொறுப்பை வகிப்பார்.

கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களுக்கான  தலைமைத்துவ மன்றத்  தலைவராக கட்சியின் மத்திய நிர்வாக மன்றத்  உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமது நியமிக்கப்பட்டுள்ளதாக பி.கே.ஆர்  தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில் கூறினார்.

அனைத்து நியமனங்களும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கிளைத் தலைவர்களிடமிருந்து ஒருமனதாக ஒப்புதல் பெற்ற பின்னரே செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன் பி.கே.ஆர். கட்சியின் சிலாங்கூர்   மாநில தலைவராக அமிருடின் நியமிக்கப்பட்டார்.

பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான தலைவர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

கூட்டரசு பிரதேசம், நெகிரி செம்பிலான், சபா, சரவாக், ஜோகூர் மற்றும் மலாக்கா மாநிலங்களுக்கு விரைவில் தலைவர்கள்  நியமிக்கப்படுவார்கள் என்று அன்வார் முன்னதாக அறிவித்திருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.