ECONOMY

தேசிய எடை தூக்கும் வீரனுக்கு மாமன்னர் தம்பதியர் வாழ்த்து

6 ஆகஸ்ட் 2022, 3:51 AM
தேசிய எடை தூக்கும் வீரனுக்கு மாமன்னர் தம்பதியர் வாழ்த்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - பர்மிங்காமில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக தேசிய எடை தூக்கும் வீரர் போனி புன்யாவ் கஸ்டினுக்கு பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வாழ்த்து தெரிவித்தார்.

பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோரும் தடகள வீரருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

மாமன்னர் தம்பதியர் இன்று இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் வழியாக தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

2019 மற்றும் 2021 உலக சாம்பியனான போனி, பர்மிங்காமில் நடந்த 72 கிலோ எடைக்கு குறைவான எடைப் பிரிவில் 220 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார், இது ஒரு விளையாட்டு சாதனையாகவும் இருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.