ECONOMY

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக ஏற்பாட்டில் குறும்படப் போட்டி- வெ. 13,500 பரிசை வெல்ல வாய்ப்பு

4 ஆகஸ்ட் 2022, 4:46 AM
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக ஏற்பாட்டில் குறும்படப் போட்டி- வெ. 13,500 பரிசை வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், ஆக 4- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சுற்றுலா தொடர்பான குறும்படம் தயாரிக்கும் போட்டியில் பங்கேற்க பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த போட்டியில் கட்டணம் ஏதுமின்றி அனைவரும் பங்கேற்கலாம் என்று நகராண்மை கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த போட்டி ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அது தெரிவித்தது.

அம்பாங் ஜெயா நகராண்மை கழகப் பகுதிகளில் உள்ள அழகிய இடங்களை அந்த குறும்படம் சித்தரிக்க வேண்டும் என்றும் நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.

இப்போட்டியில் முதல் பரிசு பெறும் வெற்றியாளருக்கு வெ. 5,000 ரொக்கம் மற்றும் சான்றிதழும் இரண்டாம் பரிசு பெறுவோருக்கு 3,000 வெள்ளி மற்றும் சான்றிதழும் மூன்றாம் பரிசு பெறுவோருக்கு வெ. 2,000 ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும் ஏழு வெற்றியாளர்கள் தலா 500 வெள்ளி ரொக்கத்தை ஆறுதல் பரிசாகப் பெறுவர்.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/TpTcQGneLMo6JqKL8 என்ற அகப்பக்கம் வாயிலாகவும் 012-6277210 (காமில்) அல்லது 010-5353292 (நோர்ஹானிம்) என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.