ஷா ஆலம், ஆகஸ்ட் 3: சிலாங்கூரில் உள்ள நிரந்தர உணவு உற்பத்திப் தோட்டங்களின் (டிகேபிஎம்) 12 பகுதிகளால் ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 29,276 மெட்ரிக் டன் விவசாயப் பொருட்கள் பங்களி கப்படுகின்றன.
இது பல்வேறு காய்கறிகள், பழங்கள், தொழில்துறை மற்றும் பணப்பயிர்கள் உள்ளடக்கியதாகவும் மற்றும் RM4.33 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகவும் வேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹாஷிம் கூறினார்.
சிலாங்கூர் மாநில விவசாயத் துறையின் கீழ் 1,351.45 ஹெக்டேர் பரப்பளவில் ஆலைத் திட்டத்தில் மொத்தம் 363 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்," என்று அவர் கூறினார்.


