ECONOMY

இந்த மாதம் தொடங்கி 5 கிலோ பாட்டில் சமையல் எண்ணெய் RM34.70 ஆக விற்கப்படும் - அன்னுவார் மூசா

2 ஆகஸ்ட் 2022, 6:36 AM
இந்த மாதம் தொடங்கி 5 கிலோ பாட்டில் சமையல் எண்ணெய் RM34.70 ஆக விற்கப்படும் - அன்னுவார் மூசா

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 - இம்மாதம் ஆகஸ்ட் 8 தொடங்கி 5 கிலோ பாட்டில் சமையல் எண்ணெய் 34.70 ரிங்கிட் விலையில் விற்கப்படும் என்று பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாத் மீதான சிறப்பு அதிரடிப் படையின் தலைவர் டான்ஸ்ரீ அன்னுவார் மூசா தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்திற்கான மலேசிய பாமாயில் வாரியம் RM4,063 என அறிவித்த ஒரு டன் கச்சா பாமாயிலின் (CPO) விலையின் அடிப்படையில் மாதாந்திர அதிகபட்ச சமையல் எண்ணெய் விலை அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அன்னுவார் கூறினார்.

"இதன் வழி, தற்போது RM39 முதல் RM42 வரை விற்கப்படும் 5 கிலோ பாட்டிலின் அதிகபட்ச விலை RM34.70 க்கு விற்கப்படும்," என்று அவர் கூறினார்.

பணவீக்கம் தொடர்பான சிறப்பு ஜிஹாத் பணிக்குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.