ECONOMY

மக்கள் கல்வி வகுப்பு 25,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயனளிக்கிறது

1 ஆகஸ்ட் 2022, 8:12 AM
மக்கள் கல்வி வகுப்பு 25,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயனளிக்கிறது

கோம்பாக், ஆக 1: இந்த ஆண்டு  சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டத்தின் பிரத்தியோக வகுப்புகள் (PTRS) தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்தபட்டதை அடுத்து, 25,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அது பயனளிக்கிறது.

கூடுதல் வகுப்பு உதவி தவிர, மாணவர்களின் வசதிக்காக மதிய உணவுக்கான செலவுக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் (இணைப்பு) அல்லது எம்பிஐ நிதியளித்ததாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"அனைத்து நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பு உதவி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படாவிட்டால், கல்வியில் தோல்வி அடையும் அபாயம் இருப்பதாக கணிக்கப் படுகிறது.

"எனவே PTRS மூலம், மலேசிய கல்விச் சான்றிதழை (எஸ்பிஎம்) பெற அவர்களுக்கு உதவலாம். அவர்கள் திட்டத்தை சரியாகப் பின்பற்றினால், சிறந்த தேர்வு முடிவுகளை அடைய முடியும்," என்று அவர் கூறினார்.

‘’முழுமையான கல்வி, சிறந்த இளம் தலைமுறை உருவாக்கத்திற்கு’’ என்ற கருப்பொருளுடன் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை  கோம்பாக்கிலுள்ள பத்து கேவ்ஸ் பொது தளத்தில் இன்று  ஆரம்பித்து வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

நவம்பர் 26 அன்று சிலாங்கூர் பட்ஜெட் 2022 ஐ அமிருடின் சமர்ப்பித்த போது, இந்த ஆண்டு PTRS க்காக RM70 லட்சம் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

மற்றவற்றுடன், ePTRS.my போர்ட்டலின் நிரப்புதலை வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் திறன்களை வலுப்படுத்தவும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.