கினாபாத்தாங்கன், ஜூலை 31: இங்குள்ள கினாபாத்தாங்கன் நகரின் கம்போங் தஞ்சோங் புலாட் சினார் ஜெயா ஆற்றங்கரையில் நேற்று மதியம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது முதலையால் தாக்கப் பட்டதாக நம்பப்படும் பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) சபாவின் அறிக்கையின்படி, நோர்சிலா சயோங், 32 என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் கடைசியாக காணவில்லை என தெரிவிக்கப் பட்ட இடத்திலிருந்து 800 மீ தொலைவில் இன்று காலை 6.53 மணியளவில் மீட்புக் குழுவினர் மற்றும் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டார்.
ஜேபிபிஎம் க்கு நேற்று மாலை 3.42 மணியளவில் காணாமல் போனவர் குறித்து அவசர அழைப்பு வந்தது, கினாபாத்தாங்கன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஐந்து பேர் கொண்ட குழு நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்டவர் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கினாபாத்தாங்கன் ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஆற்றுப் பகுதியானது, நீர் பெருகும் போது மீன் பிடிக்கும் இடமாகும்.


