ஷா ஆலம், ஜூலை 30- நாளை கோம்பாக்கில் நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அதிர்ஷ்டக் குலுக்கின் வழி பல்வேறு கவர்ச்சிகரமான பொருள்களைத் தட்டிச் செல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்டக் குலுக்கில் தேர்வு பெறுவோருக்கு மோட்டார் சைக்கிள், சைக்கிள், 42 அங்குல தொலைக்காட்சி, மடிக்கணினி, விவேக கைப்பேசி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.
காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை நீடிக்கும் இந்த ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் புதிய அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட பெடுலி ராக்யாட் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைப்பார்.
இதே போன்ற நிகழ்வு அம்பாங் ஜெயா தாமான் கோசாஸ், கோல லங்காட் டத்தாரான் பந்தாய் மோரிப், கோல சிலாங்கூர் அரங்கம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற போலவார்ட் சதுக்கம் ஆகிய இடங்களில் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமானோர் பயன்பெறும் வகையில் 35 கோடி வெள்ளி மதிப்பில் இந்த சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.



